இனியும் பொறுத்து பலனில்லை: சூர்யாவிடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு தாவிய இயக்குனர்

3rd of July 2014
சென்னை:புதுமுக இயக்குனர் ராஜா சுப்பையா தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ள படம் நடித்துள்ள படம் சரவணன் என்கிற சூர்யா. இந்த படத்திற்கு அந்த பெயரை எப்போது சூட்டினாரோ அன்றுமுதல் அவரது நிம்மதி தொலைந்தது என்றே கூறவேண்டும். இந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்தார். 
 
நடிகர் சூர்யாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக தலைப்பு உள்ளதாக கூறி அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு சூர்யா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால் அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதையாகவே போனது,

படப்பிடிப்பு முடிந்தும் படத்தினை வெளியிட முடியாமல் தவித்தார் இயக்குனர் ராஜா சுப்பையா.
 
இனியும் மோதி பலனில்லை என்ற முடிக்குவந்த அவர் தற்போது படத்தின் பெயரை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டார்.ஆம் இப்போது படத்தின் பெயர் போஸ் பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் இது. அதுமட்டுமின்றி வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் வரும் சிவகார்த்திகேயன் போல் போஸ்டரை வடிவமைத்து விட்டார்.
 
இதற்கும் சிவகார்த்திகேயன் பிரச்னை பன்னாமல் இருந்தால் சரி!!!

Comments