1st of July 2014
சென்னை:முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்களின் ஆடியோ விழாக்களுக்கு அவசியம் வந்து விடுவார் த்ரிஷா. ஆனால் அவரது சமகாலத்து நடிகையான நயன்தாரா தான் நடிக்கிற படங்களின் எந்த விழாக்களிலும் பங்கேற்காததைப்பார்த்து இப்போது த்ரிஷாவும் டேக்கா கொடுத்து வருகிறார். ஆனால் இப்படி தாங்கள் நடிக்கிற படங்களை புறக்கணிக்கும் இந்த நடிகைகள் இரண்டு பேரும் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் இரண்டு பேருக்குமே
எந்த விதத்தில் சம்பந்தம் இல்லாத அந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து
கொண்டதோடு, அது எங்கள் குடும்ப விழா என்றும் மார்தட்டிக்கொண்டனர்.
இதைக்கேட்டு கோடம்பாக்கத்திலுள்ள பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களும்
மேற்படி நடிகைகள் மீது காண்டாகி உள்ளனர்.
இந்தநிலையில், ஜெயம்ரவிக்கு ஜோடியாக தான் நடித்துள்ள பூலோகம் படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடந்தது, அதில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அதுபற்றி ஜெயம்ரவியிடம் கேட்டதற்கு, அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரை அங்கிருந்து அழைத்து வரவேண்டுமென்றால் செலவு செய்ய வேண்டுமே என்றுதான் விட்டு விட்டோம் என்று சமாளித்தார்.
Comments
Post a Comment