விஜய்யின் இளையதளபதி நாற்காலி எனக்கு வேண்டும்: ஜெய்யின் பேச்சால் கோபத்தில் ரசிகர்கள்!!!

3rd of July 2014
சென்னை:பகவதி படத்தில் விஜய் தம்பியாக அறிமுகம் ஆனவர் ஜெய். அதன்பின்னர் பெரிதாக வெற்றிகளை கொடுக்கமுடியாமல் தவித்தவருக்கு எங்கேயும் எப்போதும் வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள படம் வடகறி.சுமாரான வரவேற்பை பெற்றுள்ள இப்படம் குறித்து ஒரு வார இதழ் ஒன்றில் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதுதான் விஜய் ரசிஅக்ர்களை வெறுப்பேற்றியுள்ளது. அவர் கூறியுள்ளது இதுதான்.
 
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் விஜய், அஜித், விக்ரம் போல் நான் வளர ஆசைபடுகிறேன். சில நேரத்தில் நான் நடுத்தர ஹீரோக்கள் லிஸ்டில் தான் இருக்கிறேன் என்று எனக்குளே கேள்வி கேட்பது உண்டு. அந்த நேரத்தில்

வரும் உத்வேகம் தான் என்னை தமிழ் சினிமாவில் ஏதாவது செய்ய தூண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் விஜய்யின் இளையதளபதி நாற்காலி எனக்கு வேண்டும் என்று ஜெய் கூறியுள்ளார்.இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. விஜய் ஆரம்பம் முதல் மிகவும்  கடுமையாக உழைத்தே இந்த னிலைக்கு உயர்ந்துள்ளார். இப்போது ரெண்டு படம் ஹிட் கொடுத்துவிட்டாலே அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கெடுக்க வந்துவிடுகின்றனர் என்கின்றனர் ரசிகர்கள்.
 
சும்மாவே சூப்பர் ஸ்டார் நாற்காலி பிரச்னை தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் இவர் தன் பங்குக்கு கொழுத்திவிட்டுள்ளார்.  நாட்டுல எல்லா பிரச்னையும் முடிந்தாலும் இவங்க நாற்காலி பிரச்னை முடியாது போல இருக்கே?

Comments