8th of July 2014
சென்னை:கடந்தமாதம் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடியான விஜய்யும் அமலாபாலும் தேனிலவு முடித்துவிட்டு வந்ததும் ‘சைவம்’ படத்தின் ரிலீஸ் மற்றும் புரமோஷன் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் விஜய்..
அதிலிருந்து ரிலாக்ஸான பின் சில தினங்களுக்கு முன் அமலாபாலின் வேண்டுகோளுக்கிணங்க இருவரும் வேளாங்கண்ணி பசிலிக்கா தேவாலயத்துக்கு சென்று வழிபட்டு வந்துள்ளனர்
அமலாபால் கிறித்துவர் என்பதால் தனது திருமணம் நல்லபடியாக முடிந்ததற்கான வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இருவரும் சென்று வந்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவலையும் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவரே தனது ரசிகர்கள் அறிந்துகொள்ளும் விதமாக பதிவிட்டுள்ளார்.
Comments
Post a Comment