ஹேப்பி பர்த்டே தனுஷ்!!!

28th of July 2014
சென்னை:தனுஷுக்கு எதற்கு முன்னுரையும் முகவுரையும்…? ஆனால் இந்த போட்டி உலகத்தில் 31 வயதில் 25 படங்கள் நடித்துவிட்ட அவரின் சாதனை ஒன்றும் அவ்வளவு சாதாராண விஷயமில்லை.. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இவர் நடிகராக அறிமுகமானபோது ‘இவரெல்லாம் ஒரு நடிகரா?” என்று ஏளனம் பேசியவர்களை எல்லாம் “இவரல்லவா நடிகர்?” என்று சொல்ல வைத்தவர்..
 
தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து அமோக வரவேற்பை அள்ளிய இவரது சாதனை விஜய், அஜீத் கூட செய்யத் துணியாதது.. அதேபோலத்தான் நடிகராக இருந்த இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறியதும் இவரது துணிச்சலுக்கு உதாரணம்..
 
சமீபத்தில் வெளியான இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ மிகப்பெரிய வெற்றியுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த வெற்றியோடு சேர்த்து  இன்று பிறந்தநாள் காணும் தனுஷுக்கு நமது b Poonththalir-Kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments