நடனம் ஆட அமெரிக்காவுக்கு போகும் நமீதா!!!

8th of July 2014
சென்னை:நடனம் ஆட, என்றதும் ஏதோ படத்தில் பாடல் காட்சி என்று நினைக்க வேண்டாம். எந்த மொழி படத்திலும் வாய்ப்பு கிடைக்காத நமீதாவுக்கு தற்போது ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பைக் கூட இயக்குநர்கள் கொடுப்பதில்லை. இதனால் மற்றவர்கள் ஆடும் நடனத்திற்கு மார்க் போட்டுக்கொண்டு காலத்தை ஓட்டியவருக்கு, கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் வரும் ஜூலை 11ஆம் தேதி நடக்கும் கலை நிகழ்ச்சி ஒன்றில் நமீதா நடனம் ஆடப்போகிறாராம். கோடம்பாக்கத்தில் இருந்து பாடகர்கள், காமெடி நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என்று ஒரு கூட்டம் கிளம்ப, அந்த கூட்டத்தில் ஒருவராக நமீதாவும் அமெரிக்காவுக்கு கிளம்புகிறார்.

Comments