சரபம், ஜிகர்தண்டாவுக்கு வழிவிட்டார் பார்த்திபன்!!!

29th of July 2014
சென்னை:ஆகஸ்ட்-1 ஆம் தேதி தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வெளியிட ஒரு மதத்திற்கு முன்பே தீர்மானித்து அதற்கான விளம்பரமும் கொடுத்துவிட்டார் பார்த்திபன்..  ஆனால் சினிமாவில்தான் நாம் நினைப்பது மாதிரி எதுவுமே நடப்பதில்லையே..
 
வேலையில்லா பட்டதாரி’யும் ‘சதுரங்கவேட்டை’யும் சேர்ந்து தியேட்டர்களை ஆக்கிரமித்துக்கொள்ள, அதனால் ஜூலை-25ல் வெளியாகவேண்டிய ‘ஜிகர்தண்டா’ ஒரு வாரம் தள்ளி ஆகஸ்ட்-1ல் ரிலீசாகிறது. அதனால் ஜிகர்தண்டாவுக்கு தியேட்டர்கள் வேண்டும்.. வேலையில்லா பட்டதாரி, சதுரங்கவேட்டை இரண்டுமே இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஓடக்கூடியவை.
 
மேலும் ஆகஸ்ட்-15ல் ‘அஞ்சான்’ வெளியாவதால் அதன் ஓட்டத்திற்காக 15 நாட்களாவது ஒதுக்க வேண்டும். அதனால் மற்ற படங்களுக்கு வழிவிட்டு தனது படத்தின் ரிலீசை ஆகஸ்ட்-29க்கு தள்ளிவைத்துவிட்டார் பார்த்திபன்.. நிறைய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தனது படம் நின்று நிதானமாக ரசிகர்களை சென்றடையவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடைவெளி விட்டிருக்கிறார் பார்த்திபன்.

Comments