பெப்பர்ஸ் டிவியின் 'கியர மாத்து!!!

1st of July 2014
சென்னை:பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும்  ஞாயிறு கிழமை  காலை 10.30 மணி முதல் 11.00  மணி வரை  ஒளிபரப்பாகி  வரும்  புதிய  நிகழ்ச்சி “கியர மாத்து”  (GEARA MAATHU) பெயருக்கு ஏற்றார் போல் முற்றிலும் வேறுப்பட்ட நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சி மூன்று கியர் கொண்டு டாப் ஸ்பீடில் சென்று கொண்டு வருகிறது.  இதில் உள்ள மூன்று கீரை பற்றி பாப்போம்.

1. ஃபன்னி கியர்

இது உலகம் முழுவதும் உள்ள funny  வீடியோக்களை உங்கள் கண்முன் கொண்டு வருகிறது.  நீங்கள் பார்க்க பார்க்க கிலே விழுந்து சிரிக்கும் வீடியோக்களை தேர்வு செய்து funny கியரில் போட்டு கொண்டு இருக்கிறார்கள்


2.  லைவ் கியர்

இந்த கியரில், ஹாலிவுட் ஷூட்டிங் ஸ்போட், நீங்கள் பார்க்காத பல விஷயங்கள், ஆச்சர்யம் படும் படி படத்திற்கு பின்னால் நடக்கும் உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. 

3.  ஹாலிவுட் கியர்

பொதுவாக நம்ம ஊர் சொப்பன சுந்தரியை வைத்து இருந்தது யார் என்று பெரும்பாலும் கிசு கிசு பேசி கொண்டு இருப்போம், கேள்வியும் பட்டிருப்போம்.  ஹாலிவுட் டில் இருக்கும் சொப்பன சுந்தரியை யார் வைத்து இருக்கிறார்கள் என்று சில பல கிசுக்கிசுகளோடு ஹாலிவுட் கியர் வருகிறது. 

Comments