விஜய் சொன்ன அந்த 'ஒத்த' வார்த்தை: குஷியான முருகதாஸ்!!!

1st of July 2014
சென்னை:கத்தி படத்தின் முழு கதையையும் கேட்ட விஜய் சூப்பர்ணா என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியது தன்னால் மறக்கவே முடியாது என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தை அடுத்து கத்தி படத்தில் மீண்டும் முருகாதஸுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா.
 
இந்நிலையில் கத்தி குறித்து முருகதாஸ் மனம் திறந்துள்ளார்.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அதில் அஜீத்தான் நாயகனாக நடித்தார். ஆனால் அதன்பிறகு இருவரும் இணையவில்லை. அதையடுத்து விஜயகாந்த், சிரஞ்சீவி, அமீர்கான். சூர்யா என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய முருகதாஸ், விஜய்யை வைத்து துப்பாக்கி என்ற படத்தை இயக்கியவர் இப்போது கத்தியை இயக்கி வருகிறார்.
 
இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுதான். ஆனால் அவர் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கயிருப்பதால், இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
 
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ், அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய்-அஜீத் இருவரையும் வைத்து படம் இயக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க சம்மதித்தால் அந்தப்படத்தை இயக்க நான் தயார், இரண்டே மாதங்களில் கதை ரெடி பண்ணிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Comments