லிங்கா’ படத்தில் ரஜினி ‘பஞ்ச்’ வசனம் பேசுகிறார்: கே.எஸ்.ரவிக்குமார்!!!

1st of July 2014
சென்னை:லிங்கா’ படத்தில் ரஜினி ‘பஞ்ச்’ வசனம் பேசுகிறார்.முந்தைய படங்களில் ரஜினி பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

16 வயதிலே படத்தில் வரும் ‘இது எப்படி இருக்கு’, முரட்டுகாளையில் வரும் ‘சீவிடுவேன்’ அருணாசலம் படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’, அண்ணாமலையில் வரும் ‘நான் சொல்றததான் செய்வேன்’, படையப்பாவில் வரும் ‘என் வழி தனி வழி’, பாட்ஷாவில் வரும் ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ உள்ளிட்ட வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன.


தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ரஜினி ‘பஞ்ச்’ வசனம் பேச மறுத்து விட்டதாக செய்திகள் பரவின. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ‘பஞ்ச்’ வசனங்கள் இருக்கும். ஆனால் திரும்ப திரும்ப பேசுவது போல் அந்த ‘பஞ்ச்’ வசனம் இருக்காது. ரஜினி என்ன பேசுகிறாரோ அது எல்லாமே பஞ்ச் வசனங்கள்தான்.

இவ்வாறு கூறினார்.

லிங்கா படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா இணைந்து நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.

Comments