விண்கலத்தில் டான்ஸ் ஆடும் ரஜினி!!! ரஜினிக்கு என்னாச்சு? - கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்!!!

18th of July 2014
சென்னை:கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பும் ஹைதராபாதிலேயே நடக்கவிருக்கிறதாம். இந்தப் படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள் என்றும்
 
அதற்காக பிரம்மாண்ட விண்கலம் போன்ற ஒரு செட்டை அமைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விண்கல செட்டில் எடுக்கப்படும் பாடல் காட்சிக்கான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மனோ பாடியிருக்கிறார். விண்கலத்தில் ரஜினி நடனம் ஆடுவது மாதிரியான இப்பாடல் காட்சி வித்தியாசமான முறையில் படமாகவிருக்கிறதாம்.

ரஜினிக்கு என்னாச்சு? - கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்!!!
 
லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்தார் என்று பிரபல நாளிதழ் ஒன்றிலும், சில இணைய தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த செய்திகளை மறுத்துள்ளார் ‘லிங்கா’ படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இது சம்பந்தமாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தந்துள்ள விளக்கத்தில், ரஜினிகாந்த முழு ஆரோக்கியத்துடன், எப்போதும்போல படு சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் அத்தனையும் பொய். எப்போதும் போல அவர் படு உற்சாகத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Comments