மும்பையில் சோனியின் புதிய கேமரா அறிமுக நிகழ்ச்சியில் கார்த்திக் சீனிவாசன்!!!

6th of July 2014
சென்னை:கேமரா தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சோனி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒமேகா வகை கேமராக்களின் பிராண்ட் தூதராக தென்னிந்தியாவில் பிரபலமாக விளங்கும் புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசனை கடந்த மாதம் நியமித்தது.
 
பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ள இவரின் பணி சோனியின் புதிய தயாரிப்பான ஒமேகா வகை கேமராக்களை பற்றி இந்தியா மட்டுமல்ல.. உலகெங்கிலும் கருத்தரங்கு மற்றும் பயிற்சி அரங்கு நடத்துவதுதான்.. அந்தவகையில் சோனி நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான 4k Sony Alpha 7s என்ற கேமராவை மும்பையில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தியது.
 
இந்த விழாவில் கலந்துகொண்டு அந்த கேமராவின் தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றினார் கார்த்திக் சீனிவாசன்… இந்த நிகழ்சசியில் சோனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருடன் ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய கேமரா வல்லுனர்களும் கலந்துகொண்டனர்.

Comments