5th of July 2014
சென்னை:நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம் பற்றி ஒரு படவிழாவில் போட்டு உடைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். இதுபற்றிய விவரம் வருமாறு..
சென்னை:நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம் பற்றி ஒரு படவிழாவில் போட்டு உடைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். இதுபற்றிய விவரம் வருமாறு..
மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என தடம் பதித்துள்ள ஆஸ்ட்ரோ நிறுவனம் திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளது.
மலாய், சீன, தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ள து. தமிழில்’அப்பளம்’ படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக வெற்றியையும் பல விருதுகளையும் பெற்றது. இரண்டாவது படமாக ‘மைந்தன்’ தயாரித்துள்ளது. சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ’ கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார்.
மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று பிரசாத்லேப் திரையரங்கில் நடைபெற்றது. மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வெளியிட்டார். இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பாடல்களை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசும் போது கூறியதாவது,
“இங்கே படக் கதாநாயகன் பேசும் போது ரஜினி,கமல் படம் பார்த்து வளர்ந்தேன் என்றார். என்னை பிதாமகன் என்றார். நான் இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் அது என் தனிமனித சாதனை அல்ல. எனக்குப் பின்னால் இருந்த குழுவின் சாதனை. போனதலைமுறை நடிகர்களையும் இயக்கினேன். இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்த தலைமுறையையும் இயக்குவேன். நான் எதனால் சினிமாவில் நிலைக்க முடிந்தது என்றால்,என் வெற்றியின் ரகசியம் வேறொன்றுமில்லை. நான் எல்லாரையும் அனுசரித்துப் போவதுதான்.
இங்கே விமல் வந்திருக்கிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைத்தது நான்தான். அவர் பிரியதர்ஷினி என்கிற பெண்ணைக் காதலித்தார் இரண்டு பேர் வீட்டுக்கும் இது தெரியாது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார் ரகசியமாக.
நான் சவீதா கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போன போது அங்கு மாணவிகள் கிசுகிசுத்தார்கள். இது பற்றிப் பேசிய போது வெளியே தெரியக் கூடாது என்றார்கள். அப்படியா விஷயம் என்று இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்றேன். கொண்டு வந்தார்கள்.அதே மேடையில் எல்லார் மத்தியிலும் விமலுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். எல்லாருக்கும் தெரிய வைத்தேன். அப்படி திருட்டுக் கல்யாணம் செய்த விமலுக்கு நான்தான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைத்தேன். இப்படி திருட்டு கல்யாண ஜோடி யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைக்கத்தயார்.
மலேசியாவில் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பல துறைகளில் வெற்றிகளைக் குவித்த இவர்கள் இதிலும் வெற்றி பெற்றுச் சாதனை படைப்பார்கள், “என்று கூறி வாழ்த்தினார்.
இவ்விழாவில் மலேசியஆஸ்ட்ரோ நிறுவன நிர்வாகத் துணைத்தலைவர் ராஜாமணி, இயக்குநர் சமுத்திரக்கனி, ராஜகுமாரன் (தேவயானி) நடிகர் விமல், ஸ்ரீகாந்த், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், இசையமைப்பாளர் மன்ஷேர் சிங், நடிகைகள் ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா
நாயர்,ஒளிப்பதிவாளர் என்,கே. ஏகாம்பரம், நாகேந்திரன், மலேசியஎன்.ஜி.பி.நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவநீதம் கணேசன், டத்தோசாகுல் ஹமீது, நஜ்வா அபுபக்கர்ஆகியோரும் பேசினார்கள்.
Comments
Post a Comment