28th of July 2014
சென்னை:சரண் இயக்கிய படம் அமர்க்களம். இந்த படத்தில் அஜீத்-ஷாலினி இருவரும்
ஜோடி சேர்ந்தனர். படத்தில் காதலர்களாக நடித்த அவர்கள் நிஜத்திலும்
காதலிக்கத் தொடங்கி விட்டனர். இந்த செய்தி அமர்க்களம் படப்பிடிப்பு
நடந்தபோது இலைமறையாக பரவிக்கொண்டிருந்தது.
இதையடுத்து அவர்கள் தங்களது
காதலை பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கினார். அதனால், இருவீட்டார்
ஆசீர்வாதத்துடன் அஜீத்-ஷாலினி திருமணம் 2000-ம் ஆண்டில் கோலாகலமாக
நடைபெற்றது. அதன்பிறகு அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகள் பிறந்தார். அவருக்கு
தற்போது 4 வயது ஆகிறது.
இந்த நிலையில், தற்போது ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும் அஜீத், அவரை நல்லமுறையில் கவனித்து வருகிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று அவருடனேயே நேரத்தை செலவிடுகிறாராம். அதுமட்டுமின்றி, படப்பிடிப்புக்கு வந்த பிறகும் அவ்வப்போது மனைவிக்கு போன் போட்டு நலம் விசாரித்துக்கொண்டேயிருக்கிறாராம்.
மேலும், என் மகள் அனோஸ்கா எல்லார் வீட்டிலேயும் ரெண்டு பசங்க, மூணு பசங்க இருக்காங்க. நம்ம வீட்ல நான் மட்டும் தனியா இருக்கேன் என்று அடிக்கடி பீல் பண்ணுவாள். அதோடு, எனக்கொரு தம்பி பாப்பாவோ, தங்கச்சி பாப்பாவோ இருந்தால் எப்படி இருக்கும் என்பாள். அவளது சந்தோசத்துக்காக இப்போது ஒரு தங்கச்சியோ, தம்பியோ வரப்போகிற செய்தி அவளைப்போலவே எங்களுக்கும் பெரிய சந்தோசத்தை தருகிறது என்றும் சொல்கிறாராம் அஜீத்.
Comments
Post a Comment