7th of July 2014
சென்னை:சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து நேற்று நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் அது குறித்து விஜய் பேசினார்.
இந்த விழாவிற்கு என்னை வரவேண்டும் என்று அழைத்தார்கள். ஆனால், விருது கொடுத்தாலும் நான் வரமாட்டேன் என்றுதான் சொன்னேன்.
உங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்கிணங்க ‘தலைவா’ படத்திற்காகத்தான் உங்களுக்கு விருதை வழங்குகிறோம் என்றார்கள். அதன் பின் வர சம்மதித்தேன்.
தலைவா’ படத்திற்காக மட்டுமே இங்கு வந்தேன். அந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். சூழ்நிலை காரணமாக சரியாக ஓடவில்லை.
தலைவா’ படத்திற்காக மட்டுமே இங்கு வந்தேன். அந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். சூழ்நிலை காரணமாக சரியாக ஓடவில்லை.
நான் பழசையெல்லாம் மறக்க மாட்டேன். நான் எப்போதும் தளபதியாகவே இருக்கிறேன். அப்புறம்தான் சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம்.
என்னை விட நல்லா நடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. என்னை விட அழகா இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் எப்பவுமே சாதாரணமான ஆளு,” என விஜய் பேசினார்.
Comments
Post a Comment