வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ ரிலீஸ் ப்ளான்!!!

2nd of July 2014
சென்னை:வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். பிருத்திவிராஜ், சித்தார்த், வேதிகா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
 
தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் படக் குழுவினர் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இந்த மாத கடைசியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யவும் ப்ளான் செய்துள்ளனர்.
 
வசந்தபாலன் கடைசியாக இயக்கிய படம் ‘அரவான்’. இந்தப் படத்தில் பழங்காலத்து தமிழர்களின் கதையைச் சொன்ன வசந்தபாலன், ‘காவித்தலைவன்’ படத்தில் நாடக கலையை கையில் எடுத்திருக்கிறார். ‘காவியத்தலைவன்’ பல ஸ்பெஷல் விஷயங்களுடன் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Comments