5th of July 2014
சென்னை:ஸ்லிம் தேக ரகசியத்துக்கு காரணம் இருக்கிறது என்றார் காஜல் அகர்வால்.இதுபற்றி அவர் கூறியதாவது:தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிப் படங்களில் நடித்துவருகிறேன். இதனால் கவர்ந்திழுக்கும் உடற்கட்டை ஸ்லிம்மாக பராமரிக்க வேண்டி இருக்கிறது. எப்போதுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதால் சைவ உணவையே சாப்பிடுகிறேன்.

தொடர்ச்சியாக யோகா பயிற்சியும் செய்கிறேன். அவுட்டோர் ஷூட்டிங் செல்ல வேண்டி இருந்தால் அங்குபோய் இருப்பதை சாப்பிட்டுவிட்டு பின்னர் அவதிப்படுவதை நான் விரும்புவதில்லை. எங்காவது செல்வதாக இருந்தால் கையில் சில சாமான்களையும் எடுத்துக்கொள்வேன். அப்போது யாரையும் எதிர்பார்க்காமல் நானே எனக்கு ஏற்றபடி சமைத்து சாப்பிடுவேன்.
எனக்கு பெங்காலி ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டேன். ஐஸ் க்ரீம் என்றால் அவ்வளவு ஆசை. இவையெல்லாம் வழக்கமாக நான் சாப்பிடும் ஐயிட்டங்கள். அப்புறம் ஹைதராபாத் பிரியாணி என்றால் ரொம்பவே பிடிக்கும். மதிய உணவு நேரத்தில் எனக்கு கண்டிப்பா பிரியாணி இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஹைதராபாத் வருகிறேனோ, அப்போது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டேன்,
தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருக்க மாட்டேன். யோகா, ஏரோபிக் இவற்றோடு கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்வேன். உடற்பயிற்சி செய்யறதுல ரொம்பவே கவனமா இருப்பேன்,
இதுதவிர வாரத்தில் 3 நாள் தவறாமல் யோகா செய்துவிடுவேன். மற்ற நாட்களில் வெயிட் தூக்கி பயிற்சி செய்கிறேன். இதுதான் எனது ஸ்லிம் தோற்றத்தின் ரகசியம்.இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Comments
Post a Comment