3rd of July 2014
சென்னை:கும்கி தொடங்கி மஞ்சப்பை வரை நான் நடித்த எல்லா படங்களுமே ஹிட்தான் என்ற
சில மேடைகளில் தனது ஹிட் செண்டிமென்டைப்பற்றி லட்சுமிமேனன் சொல்லி
வருவதைக்கேட்ட நந்திதாவும் இப்போது நான் நடித்த அட்டகத்தி, எதிர்நீச்சல்,
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என எல்லா படங்களுமே
ஹிட்தான் என்று டமாரமடித்து வருகிறார்.
அதிலும் நான் நடித்த எந்த படங்களும் மெகா பட்ஜெட் கிடையாது. ஆனால் மெகா ஹிட் படங்களாகி உள்ளன. அதோடு நான் நடித்த படங்களின் வெற்றியை கருத்தில் கொண்டு சில நடிகைகளைப்போன்று படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்தவில்லை. தயாரிப்பாளர்களாக பார்த்து கொடுப்பதைத்தான் வாங்கி வருகிறேன் என்று தனது சுயபுராணம் பாடும் நந்திதாவிடம், நீங்கள் மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்க முண்டியடிப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், அதெல்லாம் இல்லை என்கிறார்.
என்னைப்பொறுத்தவரை எந்த வாய்ப்பாக இருந்தாலும் தானாக வரவேண்டும். இந்த வேடத்தில் நந்திதா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர்கள் முடிவு செய்து என்னை அழைக்க வேண்டும். அதைத்தான் விரும்புகிறேன். மேலும், முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால் முன்னணி நடிகை, வளர்ந்துவரும் ஹீரோக்களுடன் நடித்தால் இரண்டாம் தட்டு நடிகை என்று சொல்வதையும் நான் ஏற்க மாட்டேன். எல்லோரும இங்கே ஒன்றுதான். யாருடன் நடித்தாலும் படங்களின் வெற்றிதான் நம்மை யார் என்று தீர்மானிக்கிறது என்கிறார் நந்திதா.

Comments
Post a Comment