கபடி டீமை வாங்கிய ‘லிங்கா’ ஹீரோயின்

18th of July 2014
சென்னை:ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பல பாலிவுட் பிரபலங்கள் கிரிக்கெட் விளையாட்டு அணியை வைத்துக் கொண்டு, போட்டிகள் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு ட்ரென்டாக இருந்து வருகிறது.
 
அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் ஹீரோயினும், ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருபவருமான சோனாக்‌ஷி சின்ஹாவும் இடம் பெற்று விட்டார். ஆனால், சோனாக்‌ஷி தேர்ந்தெடுத்திருப்பது கபடி விளையாட்டை தான்!
 
உலக கபடி விளையாட்டில் ஆட இருக்கும் ‘யுனைடெட் சிங்ஸ்’ என்ற டீமின் ஒரு பங்குதாரராகி இருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா! இவரை தவிர பாலிவுட் பிரபலங்களான அக்‌ஷய் குமார் மற்றும் ஹனி சிங்கிற்கும் ஒவ்வொரு டீம்-கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீம்-களின் கபடி லீக் ஆட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ஆம் தேதி லண்டனில் துவங்கவுள்ளது.

Comments