கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்தில் யுவனுக்கு கல்தா!!!

23rd of July 2014
சென்னை:சென்னை: கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா திடீரென நீக்கப்பட்டுள்ளார்.சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கினார் முத்தைய்யா. இவர் அடுத்து இயக்கும் படம் கொம்பன்.
இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
 
கார்த்தி நடிக்கிறார். இந்த படத்துக்காக பெரிய மீசை வளர்த்து வருகிறார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். பருத்தி வீரன் படத்துக்கு பிறகு கிராமத்து ஹீரோ வேடத்தில் இதில் கார்த்தி நடிக்கிறார். இப்படத்துக்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமானார். இந்நிலையில் திடீரென அவரை நீக்கிவிட்டு,
 
ஜி.வி.பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இது பற்றி டுவிட்டரில் ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், நடிப்பு, இசைக்கு இடையே பணிகள் ஜரூராக நடக்கிறது. அடுத்து, கார்த்தி நடிக்கும் கொம்பன் படத்துக்கு இசை அமைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.கொம்பன் படத்தை விரைவாக முடிக்க பட யூனிட் முடிவு செய்துள்ளதாம். பட பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க வேண்டும் என யுவனிடம் கூறப்பட்டதாம். அவர் அதிக நாட்கள் கேட்டதாலேயே அவரை நீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Comments