6th of July 2014
சென்னை:பல தோல்விகளுக்குப் பிறகு, தனது அப்பாவான நடிகர் சத்யராஜையே தயாரிப்பாளராக்கி, களம் இறங்கியுள்ள சிபிராஜ், தற்போது அவர் நடித்துக்கொண்இருக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை தான் நம்பியிருக்கிறார். எப்படியாவது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் உள்ள சிபிராஜின் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் ஒன்று முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாம்.
பிரத்யேக பயிற்சிக் கொடுக்கப்பட்டுள்ள அந்த நாய் வரும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெரும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த நாய்க்கு போட்டியாக மற்றொரு நாய் படம் ஒன்று தமிழ் சினிமாவில் உருவாகிறது.
விஷ்ணு, ரம்யா நம்பீசன் நடித்த ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய பாலாஜி, தற்போது ’எங்க காட்டுல மழை’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்திலும் ஒரு நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம். மேலும் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு இந்த நாய் கொடுக்கும் கவுண்டர் அனைவரையும் ரசிக்க வைக்கும் என்கிறார் இயக்குநர் பாலாஜி.
காமெடி படமாக உருவாகும் இந்த நாய் வெற்றி பெறப் போகிறதா, அல்லது சீரியஸான படத்தில் நடிக்கும் அந்த நாய் வெற்றி பெற போகிறதா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.

Comments
Post a Comment