2nd of July 2014
சென்னை:மலையாளத்தில் சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கும் படம் ’பெங்களூர் டேஸ்’.
ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க, இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார். இவர்தான், மலையாளத்தில் ஏற்கெனவே ஹிட்டான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்திற்கான கதையை எழுதியவர்.
இப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து படத்தின் ரீமேக் உரிமையை பெறுவதற்கு பலத்த போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
கடும் போட்டிக்கு இடையே ‘பெங்களூர் டேஸ்’ என்ற படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உரிமையை பி.வி.பி.சினிமா நிறுவனமும், பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தில் ராஜுவும் இணைந்து பெற்றிருக்கிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இப்படத்தினை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் இருமொழிகளிலும் 'பொம்மரிலு' தெலுங்கு படத்தை இயக்கிய பாஸ்கரன் இயக்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம், தமிழில் ஆர்யா, பரத், சமந்தா ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. . எனவே, தற்போது ஹீரோக்கள், ஹீரோயின்களை தேடும் படலம் தமும்முரமாக நடந்து வருகிறதாம்..!
Comments
Post a Comment