நாயகன்’ ரீமேக்கிற்கு சூர்யா தான் சரியான சாய்ஸ்: லிங்குசாமி வாய்ஸ்!!!

8th of July 2014
சென்னை:அஞ்சான்’ படத்திற்கான இசைவெளியீட்டு விழா வேலைகளில் பிஸியாக உள்ளார் லிங்குசாமி.
 
இருப்பினும் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் எட்டாம் வருட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லிங்குசாமி அந்த விழா மேடையில் சூர்யாவின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசினார்.

அப்படி பேசும்போது “நாயகன் படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் நடிப்பதற்கு பொருத்தமான ஆள் சூர்யா மட்டும் தான். அதற்கான எல்லா தகுதிகளும் அவருக்கு இருக்கிறது” என்று புகழாரம் சூட்டினார்.
 
சூர்யா தற்போது நடித்துள்ள ‘அஞ்சான்’ படமும் மும்பையை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ள கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments