எது மியூசிக்கல் மூவி?” –இயக்குனர்’ ஜேம்ஸ் வசந்தன் புது விளக்கம்!!!

20th of July 2014
சென்னை:தொடர்ந்து ஏழு வருடங்களாக இசையமைத்து வந்த ஜேம்ஸ் வசந்தன் தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன் மூலமாக டைரக்ஷன் துறையிலும் கால் பதித்து இன்னொரு ஆச்சர்யத்தை தந்திருக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
 
இதில் ஒரு புதிய முயற்சியாக 1940களில் வந்த பழைய படங்களைப்போல இதில் நடிப்பவர்களே பாடல்களை பாடும் முறையை மீண்டும் கொண்டுவந்து இதை ஒரு மியூசிக்கல் படமாக உருவாக்க இருக்கிறாராம் ஜேம்ஸ் வசந்தன்.
 
மியூசிக்கல் மூவி ஹாலிவுட்ல இருந்து நம்ம ஹோலிவுட் வரைக்கும் நிறைய வந்திருக்கிறதா சொன்னாலும், கேட்க இனிமையான பாடல்கள், பார்க்க அழகான இடங்களை காட்டினால் மட்டுமே அது மியூசிக்கல் மூவி ஆகிவிடாது. அந்தப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளே தனது சொந்தக்குரலில் பாடி நடித்தால் தான் அது மியூசிக்கல் மூவி ஆகும் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Comments