தமிழ்ப்படத்திற்காக வெங்காய லாரியில் பயணம் செய்த கன்னட நடிகை!!!

18th of July 2014
சென்னை:ஆரோகணம்’ படத்தை அடுத்து இப்போது தனது அடுத்த படத்திற்கான டைரக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தனது புதிய படத்திற்கு ‘நெருங்கிவா.. முத்தமிடாதே’ என பெயர் வைத்துள்ளார் லட்சுமி.
 
இந்தப்படம் தற்போது சமூகத்தில் பற்றி எரியக்கூடிய விஷயம் ஒன்றை மையப்படுத்தி இருக்கும் என்றும் ஒரு திரியை கொளுத்திப் போடுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்தப்படத்தில் பியா மற்றும் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்..
 
இந்தப்படம் சாலையில் நடக்கின்ற, பயணம் தொடர்பான கதைக்களத்தை கொண்டுள்ளதாம்.. கிட்டத்தட்ட படத்தில் இருபது நிமிடங்களுக்கு மேல் இடம்பெறும் காட்சிகளுக்காக தொடர்ந்து வெங்காய மூட்டைகள் ஏற்றிய ட்ரக் ஒன்றின் மீது அமர்ந்து கதாநாயகி ஸ்ருதி பயணம் செய்யவேண்டியிருந்ததாம். வெங்காய வாடையே பிடிக்காத அவர் அதையும் பொறுத்துக்கொண்டு காட்சி சிறப்பாக வர ஒத்துழைப்பு கொடுத்தாராம்..
 
இந்தப்படத்தை நூறு சதவீதம் கமர்ஷியல் படமாக எடுக்க இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், இதற்கு முன் வந்த பெண் இயக்குனர்கள் கையாண்ட கதைக்களங்களை விட்டு விலகி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு பொழுதுபோக்கு படமாக இதை இயக்குவேன் என்கிறார்.

Comments