விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொஞ்சம்கூட பொருந்தாது: கத்தி பட வில்லன் நடிகரின் பேட்டியால் பரபரப்பு!!!

18th of July 2014
சென்னை:எல்லோரும் தன் பங்குக்கு ஏதாவது சொல்ல தான் மட்டும் அமைதியாக இருக்கலாமா என்று எண்ணினாரோ என்னவே நீல்நிதின், அவரும் புதிதாக ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். நீல் நிதின் யார் என்று நினைக்கிறீர்களா? கத்தி படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிப்பவரே அவர்.
 
ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது நடித்துவரும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள இந்த படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நீல்நிதின் நடிக்கிறார். இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் கூறியபோது,
 
இந்த படத்தில் நான் வில்லனாக நடித்தாலும் விஜயுடன் மோதுவதுபோல சண்டைக்காட்சிகள் கிடையாது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விஜய்யை நேரில் முதன்முதலாக பார்த்தபோது, அவரது எளிமையை கண்டு வியந்தேன். சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற விஜய், ஒரு சாதாரண துணை நடிகர் போல மிக எளிமையாக இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது.
 
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றவர்கள் செய்யும் பந்தாக்களுக்கு அளவே இல்லை. இந்நிலையில் மிக எளிமையாக இருக்கும் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது கொஞ்சம்கூட பொருந்தாது. அதைவிட வேறு ஏதாவது பெரிய பட்டம் இருந்தால் அந்த பட்டத்தை விஜய்க்கு தாராளமாக கொடுக்கலாம், என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. (54)

Comments