டிரைவர் ஆன் ட்யூட்டி’யில் ஜனனி ஐயர்!!!

1st of July 2014
சென்னை:அவன் இவன்’, ‘தெகிடி’ உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ள ஜனனி ஐயர், மோலிவுட்டிலும் பிரபலமான நடிகை! ஏற்கெனவே ‘மோசயிலே குதிர மீன்கள்’ என்ற மலையாள படத்தில் ஆசிஃப் அலியுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜனனி ஐயர், மீண்டும் ஆசிஃப் அலியுடன் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார். 
 
இந்தப் படத்திற்கு ‘டிரைவர் ஆன் ட்யூட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் மனோஜ் பாலோடன் இயக்கும் இப்படத்தில் பெண்கள் காவல் நிலையம் முக்கிய இடம் பெறுகிறதாம்! இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

Comments