6th of July 2014
சென்னை:முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுக்கு காத்திருந்து படம் எடுப்பவர்கள் எச்சில் இலையில் சாப்பிடுபவர்களுக்கு சமமானவர்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கூறியுள்ளார்.
துவார் சந்திரசேகர் தயாரிக்கும் ஐந்தாவது படம் ‘தொட்டால் தொடரும்’. அறிமுக இயக்குநர் கேபிள் சங்கர் இயக்கும் இப்படத்தில் தமன் ஹீரோவாகவும், அருந்ததி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். சிவன் என்பவர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, பத்ரி, தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், “இது போன்ற புது இயக்குநர், புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. அதற்கு காரணம் இதுபோன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். ஆனால், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் அவர்களுக்காகவே கதை உருவாக்கப்பட்டு படம் உருவாக்கப்பட வேண்டும்.
நான் சொல்வது, முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பங்க கலைஞர்கள் பின்னாள் சென்று அவர்களிடன் தேதிக்காக காத்திருப்பதைவிட இதுபோன்ற புதுமுக கலைஞர்களுடன் சேர்ந்து படம் தயரிக்கலாம். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்காக காத்திருப்பவர்கள் எச்சில் இடையில் சாப்பிடுபவர்களுக்கு சமமானவர்கள்.” என்று காட்டமாக தெரிவித்தார்.

Comments
Post a Comment