அஞ்சானுடன் வரும் உத்தம வில்லன்!!!

5th of July 2014
சென்னை:சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள ‘அஞ்சான்’ படம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ‘
 
திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் இருந்து வரும் இன்னொரு படம் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’. இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘அஞ்சான்’ படத்தைப் போன்று இப்படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.
 
இன்று சென்னையில் நடைபெறவிருக்கும் விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் ‘அஞ்சான்’ பட டீஸர் வெளியாகவிருக்கிற நிலையில், ‘உத்தம வில்லன்’ பட டீஸரையும் அதே விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘உத்தம வில்லன்’ படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா முதலானோர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார். சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்க, ‘உத்தம வில்லனு’க்கு ஜிப்ரான் இசை அமைத்து வருகிறார்.

ஆக, இன்று இரவு இரண்டு பிரம்மாண்ட படங்களின் டீஸர் வெளியாக, இது ரசிர்கர்களுக்கு ’டபுள் டிரீட்’ ஆக அமையப் போகிறது.

Comments