24th of July 2014
சென்னை:அஜித் - கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிற நிலையில்
இப்படத்திற்கான தலைப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கௌதம் மேன்ன எப்போதும் தனது படங்களுக்கு தமிழில் கவித்துவமான தலைப்புகளை வைப்பது வழக்கம். அந்த வரிசையில் இப்படத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு டைட்டிலேயே அவர் வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் த்ரிஷா ஒரு பெண் குழந்தைக்கு தயாக நடிக்கிறார். இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் பெயர் ‘ரியா’வாம்!!
Comments
Post a Comment