28th of July 2014
சென்னை:அதர்வா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘பரதேசி’க்குப் பிறகு, மீண்டும் அவருடைய நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது ‘இரும்பு குதிரை’. ‘ஈரம்’, ‘வல்லினம்’ படங்களின் இயக்குனர் அறிவழகனின் உதவியாளர் யுவராஜ் இயக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.
அதோடு ராய் லக்ஷ்மி, ‘ஏழாம் அறிவு’ புகழ் ஜானி நியூ ட்ரியன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘பைக் ரேஸை’ மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் காதல் படமாம் இது. இப்படத்தில் பைக் ரேஸராக நடிப்பதற்கு முன்பு, இத்தாலிக்குச் சென்று பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட கோர்ஸ் ஒன்றை 18 நாட்கள் கற்றுக்கொண்டு திரும்பினாராம் ஹீரோ அதர்வா. இதனால் இப்படத்தின் சில முக்கியமான காட்சிகளில் கூட ‘டூப்’ எதுவும் போடாமல் ‘ரிஸ்க்’ எடுத்து நடித்துக் கொடுத்துள்ளாராம் அதர்வா.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ், கோபி அமர்நாத் ஆகியோர் கவனிக்க, ஐந்து சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ், கோபி அமர்நாத் ஆகியோர் கவனிக்க, ஐந்து சூப்பரான பாடல்களை உருவாக்கியிருக்கிறாராம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
Comments
Post a Comment