பழைய பாடல்களை கேட்க மகளை பழக்குகிறார் இயக்குனர் பாலா!!!

22nd of July 2014
சென்னை:இன்றைக்கு டெக்னாலஜி வளர்ச்சி என்கிற பெயரில் புதுவிதமான இசை, பாடல்கள் என தமிழ்சினிமா மாறிவிட்டாலும் பழமையின் பாரம்பரியம் கெடாமல் பாதுகாப்பதில் இயக்குனர் பாலா போன்ற ஒரு சிலரின் பங்கு மிக முக்கியமானது.
 
தனது கதைக்கு தேவையானது அல்லது பொருத்தமானது என்கிற வகையில் இன்றைய இரைச்சல் சத்தத்திலிருந்து விலகியே இருப்பவர் பாலா. அதேபோல தனது மகள் பிரார்த்தனாவுக்கும் பழைய பாடல்களை போட்டுக் கேட்டு
ரசிக்கும்படி ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். மகளும் தந்தையின் இசை ரசனைக்கு ஏற்றமாதிரியே பழைய பாடல்களை ஆர்வத்துடன் கேட்டு ரசிக்கிறாராம்.

Comments