பிரம்மாண்ட செட்டில் ஆர்யா, விஜய் சேதுபதி!!!

18th of July 2014
சென்னை:எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெகுவேகமாக வளர்ந்துவரும் ‘
புறம்போக்கு’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு கதாநாயகி கார்த்திகா தான்.
 
தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை பின்னிமில்லில் மிகப்பெரிய பிரமாண்டமான ஜெயில் செட் ஒன்றை ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையிலான டீம் ஒன்று ராப்பகலாக உழைத்து உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்ட் டைரக்‌ஷனில் நம்மை அசத்தியவர்தான் இந்த செல்வகுமார். கிட்டத்தட்ட இரண்டுகோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியிருக்கிறார்களாம். படத்தை தயாரிப்பது யுடிவி நிறுவனம் என்பதால் செலவைப்பற்றி கவலைப்படுவார்களா என்ன..?

ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் கார்த்திகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த செட்டில் 45 நாட்கள் படமாக்கப்பட இருக்கின்றன.. ஆக படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இன்றிலிருந்து தொடர்ந்து இந்த சிறைச்சாலை செட்டில் எடுக்கப்படுவதால் இவர்கள் அனைவருக்கும் 45 நாட்கள் அறிவிக்கப்படாத சிறைவாசம் என்றுதான் சொல்லவேண்டும்.
 
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜெயில் செட்டில்  படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுமாம். இந்த படப்பிடிப்பில் ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நாயர் ஆகியோர் கலந்துகொள்ள, இவர்களுடன் 600 துணை நடிகர்களும் கலந்துகொண்டு நடிக்கவிருக்கிறார்கள். ‘யுடிவி’ நிறுவனம் தயாரிக்கும் ‘புறம்போக்கு’ படத்திற்கு வர்ஷன் இசை அமைக்கிறார்.

Comments