5th of July 2014
சென்னை:இது கருத்துக் கணிப்புகளின் காலம். அதிலும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான் இப்போது சரியான போட்டி நிலவி வருகிறது.
சென்னை:இது கருத்துக் கணிப்புகளின் காலம். அதிலும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில்தான் இப்போது சரியான போட்டி நிலவி வருகிறது.
ஒரு வார இதழ் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அறிவிக்க, அடடே… அந்தக் கணிப்பே தப்பு, அதுல ஒரிஜனலா அஜித்தான் சூப்பர் ஸ்டாரா தேர்வானாரு, ஆனால் அவர் அதை பெரிசா எடுத்துக்கலைன்னதும், விஜய் பேரை அறிவிச்சிட்டாங்கன்னு பல செய்திகள் வெளி வந்தது.
அனைவருமே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே என்ற கருத்தைக் கொண்டிருக்க அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனையே இப்போது தேவையில்லாதது என கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள்.
இதனிடையே ஸ்டார் இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என கருத்து தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரை வைத்து படங்களை இயக்கிய ரவிக்குமாரின் கருத்து ஏகமனதாக எல்லோராலும் ஏற்கப்படக் கூடிய ஒன்றுதான்.
இது பற்றி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், “சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யாராவது தகுதிக்குரியவர் என்றால், என் மனசாட்சிப்படி அஜித்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment