விஜய் சீரியஸானவர்னு யார் சொன்னது..?!!!

 31st of July 2014
சென்னை:விஜய்யுடன் நடிப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யப்படுவது அவரது எளிமையை பார்த்துதான்.. அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் கேரவன் கொடுத்தே ஆகவேண்டும் என கேட்காமல் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு யாருக்கும் தொல்லைக்கொடுக்காமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து விடுவார் விஜய்.
 
அதேபோல தூக்கம் வருகிறதா.. உடனே சர்வ சாதாரணமாக ஒரு மேஜை மீதோ, அல்லது தரையில் விரித்தோ படுத்துத் தூங்குகிறார்..இன்னொருபக்கம் அவர் சீரியசானவர்.. படப்பிடிப்பில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள்.
 
ஆனால் அவருடன் நடித்தவர்களோ அவரைப்போல ஜாலியான ஆளை பார்க்க முடியாது என்கிறார்கள். விஜய் உடன் நடிப்பவர்களுடன் ஜாலியாக செல்பி போட்டோ எடுக்கும் மேலே உள்ள படத்தை பார்த்தால் அதுதான் உண்மை என்று தெரிகிறது.

Comments