27th of July 2014
சென்னை:இந்த தீபாவளி ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாகத்தான் இருக்கும் போல. விஜய் நடித்த கத்தியுடன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படமும் போட்டியில் இறங்கிறதாம்.
நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர், விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள், செய்திகள் வந்தாலும், படப்பிடிப்பு முழுவதுமாக நடந்து முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
ஐ படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் தான் வெளியீடு தாமதமடைகிறதாம். அவையனைத்தும் முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் “கத்தி” படம் மற்றும் விஷால் – ஸ்ருதி ஹாசன் நடிக்கும் “பூஜை” இந்த இரண்டு படங்களும் தீபாவளியன்று ரிலீஸாகவிருக்கிறது. தற்போது இந்த தீபாவளி ரேஸில் புதிதாக ஷங்கரின் “ஐ” படமும் இணைந்துள்ளது.

Comments
Post a Comment