2nd of July 2014
சென்னை:ஆர்யாவைப்பொறுத்தவரை நாம் பெரிய நடிகர் என்ற பந்தாவெல்லாம் பண்ண
மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஜூனியர் ஆர்ட்டிஸ்களிடம்கூட நட்பு
வைத்திருப்பார். அவர்களுடன்கூட ஜாலியாக விளையாடிக்கொண்டிருப்பார்.
அதேபோல், முன்னணி டைரக்டர், புதுமுக டைரக்டர் என்ற பாரபட்சமும்
பார்க்காதவராகத்தான் இதுவரை இருந்து வந்தார்.
ஆனால்,
ராஜாராணி படத்தை இயக்கிய அட்லியும் ஒரு புதுமுக இயக்குனர்தான்
என்றபோதும், அதையடுத்து சிலரிடம் கதை கேட்டிருந்தவர், இப்போது அவர்களை
அழைத்து, வேறு நடிகர் யாரையாவது வைத்து ஒரு படம் பண்ணி விட்டு வாருங்கள்.
அதையடுத்து நான் கால்சீட் தருகிறேன் என்று கூறி விட்டாராம். இதனால் அவரிடம்
கதை சொல்லிவிட்டு சில வருடங்களாக காத்திருந்த புதுமுக இயக்குனர்கள்
அதிர்ச்சியடைந்து விட்டார்கள். வருடக்கணக்கில் இவருக்காக காத்திருந்தோம்.
திடுதிப்பென்று இப்படியொரு முடிவை சொல்லிவிட்டாரே என்று பீல்
பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஆர்யாவின் இந்த முடிவுக்கு பின்னால் அவரது நட்பு வட்டார நடிகர்கள் சிலர் இருக்கிறார்களாம். அவர்கள்தான், புதியவர்கள் யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை. அதனால் அவர்கள் ஒரு படம் பண்ணி விட்டு வந்தபிறகு நாம் கால்சீட் கொடுப்பதுதான் சேப்டி. அதனால் புதியவர்களுக்கு கால்சீட் கொடுத்து விஷப்பரீட்சை செய்வதை நிறுத்திக்கொள்ளுமாறு ஆர்யவைக் கேடடுக்கொண்டார்களாம். அதனால்தான் நண்பர்கள் ரூட்டில் தானும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறாராம் ஆர்யா.
Comments
Post a Comment