சத்தமில்லாமல் அஜீத்தின் பெயருக்கு வேட்டு வைக்கும் தயாரிப்பாளரின் மகன்?!!!

3rd of July 2014
சென்னை:விளம்பரம் இல்லாமல் உதவி செய்துவருபவர் அஜீத். அப்பேற்பட்ட மனிதரின் பெயரையே டேமேஜ் செய்து வருகிறாராம் ஒரு தயாரிப்பாளரின் மகன். அதுவும் தன் குடும்பத்துக்கு உதவி செய்தவரையா என யோசிக்காமல். அதிர்ச்சியாக இருக்கிறதா?
 
பொருளாதாரத்தில் சிக்கிலில் இருந்த ஏ.எம்.ரத்னத்துக்கு வழியபோய் உதவி செய்தவ்ர் அஜீத்.ஆரம்பம் கொடுத்த தெம்பு மீண்டும் அவரை புத்துணர்ச்சி கொண்டுவந்தது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு இனிப்பான செய்தி வழங்கினார் அஜீத். பலர் அஜீத்த்தி கால்ஷீட்டுக்கு தவமிருக்க அவரோ ரத்னத்துக்கே மீண்டும் உதவி செய்துள்ளார்.
 
ரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் படம் வேக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்திற்காக முன்னணி டெக்னீஷியன்கள்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இசை, ஆர்ட் டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறைகளில் முன்னனி கலைஞர்களை ஒப்பந்தம் செய்துள்ள கவுதம் மேனனுக்கு இப்போது அதுவே பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
 
அந்த படத்திற்கு தயாரிப்பு நிர்வாக பணிகளை கவனித்துவந்த ரத்னம் திடீரென அவரது மகன் ஜோதி கிருஷ்ணாவிடம்  ஒப்படைத்துவிட்டாராம்.பதவி கைக்கு வந்ததும் அவர் செய்த முதல்வேலை தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டாராம். அதுவும் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள். இதற்கு அவர் சொல்லும் காரணம் இருக்கிறதே அது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது என்கிறார்கள். அவர் கூறிவரும் காரணம் இதுதான் எல்லா சம்பளத்தையும் மொத்தமா அஜீத் சார் வாங்கிட்டு போயிட்டாரு. அதனால் நாங்க இருக்கறதை வச்சுதான் சமாளிக்க வேண்டியிருக்கு. படம் முடிஞ்சதும் கண்டிப்பா வாங்கிக்கலாம் என்கிறாராம். இந்த பிரச்னையை எப்படியாவது அஜீத்துக்கு தெரியபடுத்தவேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.
 
காரணம் அஜீத் மற்ற நடிகர்போல் அல்ல. வந்தோமா நடித்தோமா சென்றோமா என்றில்லாமல் தன் படத்தில் பணிபுரியும் அனைவரும் சந்தோசமாக இருக்கிறர்களா என்பதை கவனிக்க கூடிய கனிவான மனிதர். அப்படி இருக்க தொழிலாளர்கள் நினைப்பது சரிதானே.
 
அஜீத் பார்வை தங்கள்மேல் படாதா என தயாரிப்பாளர்கள் காத்திருக்க இவரோ இப்படி செய்கிறாரே என நொந்துபோகத்தான் வேண்டியுள்ளது.

Comments