30th of July 2014
சென்னை:தொலைக்காட்சி தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த
சாண்ட்ரா, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில்
நாயகியாக அறிமுகமாக உள்ளார். யுரேகா இயக்கியுள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே
பிலிம் கார்ப்பரேஷ, ஜே.சதீஷ்குமார் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் நாயகி சாண்ட்ராவுக்கு இந்திப் பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. டைரக்டர் அந்தோணி டிசோசாவின் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடிக்கும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னணி நடிகைகள் பலரும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருகையில், அறிமுக நடிகையான சாண்ட்ரா இந்த பாலிவுட் வாய்ப்பு குறித்து கூறுகையில்ம், “இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பட வாய்ப்பு பற்றி சான்ட்ரா கூறுகையில், “இம்ரானைக் காதலிப்பவளாக நான் இந்தப் படத்தில் தோன்றுகிறேன். என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த டைரக்டர் அந்தோணி நான் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவளாக இருப்பேன் என்று தேர்ந்தெடுத்துள்ளார். நான் சில காட்சிகளில் மட்டும் இதில் தோன்றினாலும் பாலிவுட்டில் நுழைவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
சமீரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment