3rd of July 2014
சென்னை:இந்தி நடிகர் ஷாக்கி ஷெராப் எப்போதுமே தமிழ் படங்களில் ஆர்வமுடன்
நடிப்பவர். 8 வயது சிறுவன் இயக்கிய பிளாட்பார்ம் என்ற படத்தில் முதல்
அமைச்சராக நடித்தார். ஆரண்யகாண்டம் படத்தில் வில்லனாக நடித்தார்.
சமீபத்தில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் ஆதியின் தந்தையாகவும், இன்னொரு
நாட்டு மன்னராகவும் நடித்தார்.
தற்போது
ஜாக்கிஷெராப் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள
படத்தில் வில்லனாக நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் இந்தப் படத்தில்
விக்ரமிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்.
இது நெடுஞ்சாலையில் நடக்கும் ஒரு கதை. விக்ரம் டிரைவராக நடிக்கிறார். அவரது பயண அனுபவத்தில் நடக்கிற கதை இது. இதன் பெரும்பகுதி வடநாட்டில் நடக்கிறது. அங்கு நூற்றுக்கணக்கான லாரிகளை வைத்திருக்கும் டிரான்ஸ்போர்ட் தாதாவாக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்த வருகிறது. பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment