நடிகர் கார்த்திக்கு திடீர் உடல் நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!!!

29th of July 2014
சென்னை:நடிகர் கார்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கார்த்தி நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘மெட்ராஸ்’ படத்தையடுத்து, அவர் ‘கொம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கமுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தொடர்ந்து 30 நாட்கள் கமுதியில் கார்த்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.


கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.

நேற்று மாலை 6.30 மணிக்கு அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவில் விஷம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

Comments