28th of July 2014
சென்னை:விஜய்யா..? அஜீத்தா..? அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கருத்து யுத்தம் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுவதாக நினைக்கவேண்டாம். ஆனால் மேலே சொன்னதும் உண்மைதான். ரஜினிக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார் தனுஷ்..
இந்த வருடம் இதுவரை வெளியான டாப் 5 படங்களில் சென்னையில் மட்டும் வீக் என்ட் என்கிற மூன்று நாள் கலெக்சன் நிலவரப்படி ரஜினியின் கோச்சடையான் 432 காட்சிகள் திரையிடப்பட்டு 1.81 கோடி கலெக்சனை அள்ளியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் 360 காட்சிகள் திரையிடப்பட்டு 1.68 கோடி கலெக்சனை வசூலித்திருக்கிறது.
இதில் மூன்றாவது இடம் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்திற்குத்தான்.. நான்காவது இடத்தில் விஜய்யும்(ஜில்லா) ஐந்தாவதாக அஜீத்தும்(வீரம்) இருக்கிறார்கள். இந்த ரிப்போர்ட்டின்படி மாமனாருக்கு அடுத்த இடம் மருமகனுக்குத்தான் என்று சொல்லவந்தோம்.. அவ்வளவு தான்..!
Comments
Post a Comment