பஹத்-நஸ்ரியா இடத்தில் சித்தார்த்-சமந்தா!!!

27th of July 2014
சென்னை:தமிழ், தெலுங்குத் திரையுலகுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் பரபரப்பா பேசப்பட்டு வந்த (காதல்) ஜோடி சமந்தா – சித்தார்த் காதல் ஜோடிதான். கோயிலுக்கு போய் பரிகாரம் செய்றது முதல் திரைப்பட விழாக்கள்ல கலந்துகொள்வது வரை ரெண்டுபேரும் இணைஞ்சே வலம் வந்தாங்க. ஆனாலும், இதுவரை தங்களைக் காதலர்கள்னு ரெண்டுபேரும் இன்னும் வெளிப்படையாகச் சொல்லிக்கலை.
 
ஏற்கனவே தெலுங்குல இவங்க ரெண்டுபேரும் இணைஞ்சு நடிச்சிருக்காங்க. ஆனா இப்ப அதுவே இவங்க இணைஞ்சு நடிக்கிற புதிய படத்துக்கு இவங்க ஜோடிப்பொருத்தம் ப்ளஸ் பாய்ண்ட்டா அமைஞ்சிருக்கு. தற்போது மலையாளத்தில் ஹிட்டான ‘பெங்களூரு டேய்ஸ்’ படத்தில் பஹத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா ஆகியோரின் கூட்டணி கதாபாத்திரங்களில் தமிழில் ஆர்யா, சித்தார்த், நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் நடிக்க இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 
மலையாளத்துல இந்தப்படத்துல கணவன், மனைவியா நடிச்ச பஹத் பாசிலும் நஸ்ரியாவும்  காதலர்களா மாறி இப்ப திருமணத்துலயும் இணையப்போறாங்க. அதே மாதிரி இப்போ காதல் ஜோடியா இருக்குற சித்தார்த், சமந்தாவை இந்தப்படத்துல ஒப்பந்தம் பண்ணுனா அது ‘லைvவ்’வா இருக்கிறதோடு ரெண்டு மொழிகள்லயும் வியாபார ரீதியாகவும் பலமா இருக்கும்னு தான் இந்த முடிவாம். அப்ப துல்கர் கேரக்டரில் ஆர்யாவும் நிவின் பாலி கேரக்டரில் நாகசைதன்யாவும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.

Comments