6th of July 2014
சென்னை:ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் ‘பூஜை’ படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் பவர்ஃபுல் கேர்கடர் ஒன்றில் நடிக்கிறார். இந்த கேரக்டர் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, ‘‘பூஜை’ படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியானதும், இந்த கேர்கடருக்கு சத்யராஜ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று என் மனதுக்கு தோன்றியது. ‘

நூறாவது நாள்’, ‘வால்டர்
வெற்றிவேல்’ போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்தது மாதிரியான ஒரு வேடம் இது. இந்த கேர்கடர் அவருக்கும், ரசிகர்களுக்கும் மாறுபட்ட ஒரு அனுபவத்தை கொடுக்கும்’’ என்றார். இந்தப் படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.
ஏற்கனவே பிரபலமாக விளங்கும் நடிகர்கள் இயக்குனர் ஹரியின் படங்களில் நடிக்கும்போது இன்னொரு பரிமாணம் பெறுவார்கள் என்பது நாம் அனைவரும் அடிக்கடி கண்டுணர்ந்த நிகழ்வுதான். அப்படி ஒரு சிறப்பம்சமாகத்தான் தற்போது விஷாலை வைத்து ஹரி இயக்கிவரும் பூஜை படத்தின் முக்கிய கதாபாத்திரமாக படத்தில் நுழைந்திருக்கிறார் சத்யராஜ்.
படத்தில் சத்யராஜ் நடிப்பதை உறுதி செய்தாலும் அவருடைய கேரக்டரின் பெயரைக்கூட வெளியிட மறுக்கிறார் இயக்குனர் ஹரி. ஆனால் சத்யராஜின் மொட்டைத்தலையும் அவர் அணிந்திருக்கும் காக்கி யூனிபார்மும் மீண்டும் ஒரு ‘நூறாவது நாளையும்’ ஒரு ‘வால்டர் வெற்றிவேலையும்’ தான் நமக்கு நினைவூட்டுகிறது. அப்போ படத்துல ஏதோ வித்தியாசமா இருக்குது” அப்படிங்கிறது மட்டும் நல்லாவே தெரியுது..
Comments
Post a Comment