26th of July 2014
சென்னை:விஜய சேதுபதிக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்களில் சூது கவ்வும் படமும் ஒன்று. நலன் குமாரசாமி என்ற புதிய இயக்குனர் இயக்கியிருந்த இந்தப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து அடுத்தப்படத்துக்கு தயாரானார் நலன். இதற்காக கதையை தயார் செய்து விஜய சேதுபதியிடம் கூறினார். அவருக்கும் கதை பிடிக்கவே நடிப்பதாக கூறினாராம்.
இந்த படத்தை அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி என தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிக்க முன்வந்தார். விஜய் சேதுபதியும் இந்த படத்திற்காக தான் ஒப்புகொண்ட படங்களை இரவு பகல் பாராமல் நடித்துக்கொண்டிருந்தார்.
ஆனாலும் முடியவில்லை போல. இவருக்காக பல மாதங்களாக தயார் நிலையில் காத்திருந்த நலன் இனியும் பொறுத்தால் பலனில்லை என்று முடிவு செய்து விஜய் சேதுபதியை சந்தித்தாராம். நாம் அடுத்த படத்துல சேர்ந்து பண்ணலாம்.இப்ப வேற ஹீரோவை வைத்து எடுத்துவிடுகிறேன் என்றாராம் விஜய்செதுபதியிடம். அவரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு சரி என்றாராம்.
தற்போது நலன் முண்டாசுப்பட்டி விஷ்ணுவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். சி.வி.குமார் ஏற்கெனவே முண்டாசுப்பட்டி பாகம் ரெண்டை எடுக்க உள்ளார். முண்டாசுபட்டியை இயக்கிய ராமுவே இந்த படத்தையும் இயக்க உள்ளார்.விஷ்ணுதான் அதிலும் ஹீரோ. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் நிறுவனத்தின் அடுத்த இரண்டு படங்களிலும் தான் ஹீரோவாக நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாராம் விஷ்ணு.
Comments
Post a Comment