22nd of July 2014
சென்னைசூப்பர்ஹிட்ட்டன் ஒரு படம் ரீமேக்காகிறது என்றாலே அதற்கு ஏதாவது ஒருவகியில் பிரச்சனை கிளம்பவது வாடிக்கை தான்.. அதுதான் இப்போது ‘த்ரிஷ்யம்’ படத்திற்கும் நடக்கிறது. இந்தப்படம் கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே ரீமேக்காகி சூப்பர்ஹிட்டாகி உள்ளது. இப்போது தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கும் கமலும் படத்திற்கு பூஜை போட்டு ஆகஸ்டில் படப்பிடிப்புக்கு கிளம்ப இருக்கிறார்.
இப்போது பிரச்சனை கிளம்பியிருப்பது இந்தியில் தயாராக இருக்கும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கிற்குத்தான். பிரச்சனையை கிளப்பியுள்ளவர் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர். காரணம் அவர் இந்தியில் தயாரிப்பதற்காக வாங்கியிருக்கும் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்கிற நாவலின் கதையைப் போலவே ‘த்ரிஷ்யம்’ கதையும் இருக்கிறதாம். அதனால் சில மாதங்களுக்கு முன்னே படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்புக்கு நோட்டீஸ் அனுப்பியவர்கள், இப்போது மீண்டும் பிரச்சனையை தூசி தட்டியுள்ளார்கள்.
ஆனால் ஜீத்து ஜோசப்போ, “நானும் அந்த நாவலை படித்தேன். இரண்டு கதைகளும் பயணிக்கும் விதம் ஒரேமாதிரி இருப்பதாக தோன்றினாலும் இரண்டின் கதைக்களமும் வேறு வேறு. ஏற்கனவே இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பி, அப்புறம் அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
இப்போது தமிழில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை ஆரம்பிக்க இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் பிரச்சனையை கிளப்புகிறார்கள். ஆனால் நாங்கள் இதை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார். படம் இந்தியிலும் விரைவில் ரீமேக் ஆக இருப்பதுதான் ஏக்தா கபூர் இந்த பிரச்சனையை கிளப்ப காரணம். அப்படி என்றால் சீப் பப்ளிசிட்டி தேடும் அளவுக்கு சீப்பாகிவிட்டாரா ஏக்தா கபூர்..?
Comments
Post a Comment