22nd of July 2014
சென்னை:ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை ஆரம்பித்தபோது அந்தப்படத்துக்கான மார்க்கெட் வேல்யூ இவ்வளவு ஏறும் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் சத்தியமாக நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்.
காரணம் தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்த விமல், பெரிய வெற்றிகளை பெற்றிராத ப்ரியா ஆனந்த் இவர்களுடன் சூரி என்கிற மினிமம் கியாரண்டி காம்பினேஷனில் தான் படத்தை ஆரம்பித்தார்.
ஆனால் ‘மஞ்சப்பை’யின் வெற்றி விமலின் மார்க்கெட்டை தூக்க, ‘அரிமா நம்பி’யின் கலெக்ஷன் அதில் நடித்த பிரியா ஆனந்திற்கு வெளிச்சம் போட, இதனாலேயே இப்போது இவர்கள் நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திற்கான பிசினஸ் வேல்யூ ஏறியுள்ளது. இந்தப்படத்தை ஒரு மிகப்பெரிய தொகைக்கு வாங்க படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
Comments
Post a Comment