மத்தவங்கன்னா நியாயம்.. கமல்னா மட்டும் அநியாயமா..?!!!

18th of July 2014
சென்னை:இப்போ ‘சண்டியர்’ங்கிற டைட்டிலை வச்சு ஒரு படம் தயாராகி சென்சார்ல U/A சர்டிபிகேட்டும் வாங்கி ஆகஸ்ட்-1ல ரிலீசாகவும் இருக்குது. சோழதேவன்ங்கிற புது இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்துல நடிச்சுருக்கவங்களும் புதுமுகங்கள் தான்..
 
பத்து வருஷத்துக்கு முன்னாடி கமல் முதன்முதலா இயக்கி நடிச்ச ‘விருமாண்டி’ படம் வெளியானது உங்களுக்கு தெரியும். ஆனா அந்த படத்துக்கு அவர் முதல்ல வச்ச பேரம் ‘சண்டியர்’ தான். ஆனா அந்தப்பேரை டைட்டிலா வச்சப்ப ஒரு பக்கம் ஒரு கட்சியின் தலைவர் இந்த டைட்டிலை வைக்க கூடாதுன்னு போராட்டம் பண்ண, அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதாவும் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று சொல்லி பேசாம டைட்டிலை மாத்த சொல்லிட்டார்.
 
அதுக்குப்புறம் தான் ‘விருமாண்டி’ன்னு டைட்டிலை மாத்தினார் கமல். அப்ப பத்து வருஷத்துக்கு முன்னாடி ‘கெட்ட டைட்டிலா இருந்த ‘சண்டியர்’, இப்ப ‘நல்ல டைட்டில்’ ஆகிருச்சா..? மத்தவங்க வச்சா நியாயம்.. கமல் பண்ணினா மட்டும் அநியாயமா அப்படின்னு கமலோட ரசிகர்கள் தங்களோட குமுறலை வெளிப்படுத்தி இருக்காங்க.

Comments