தமிழில் நடிப்பதில் சமந்தா அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவருக்காக காத்திருக்கும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கும் திரைமறைவு வேலைகளில் காஜல்!!!

2nd of July 2014
சென்னை:விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடிக்கிறது வரை சம்பள விசயத்தில் அடக்கி வாசித்த காஜல்அகர்வால், அதையடுத்து தமிழில் முன்னணியில் இருந்த தமன்னா, நயன்தாரா போன்ற நடிகைகள் எல்லாம் கேட்காத அளவுக்கு தனது சம்பளத்தை 2 கோடி, 3 கோடி என்று தடாலடியாக உயர்த்தினார். அதனால் பின்னர் புதிய படங்களுக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மிரண்டு ஓடிவந்தனர்.
 
அதனால், அதற்கு முன்பே கமிட்டான ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்த பிறகு தமிழில் படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் காஜல். அவர் நடிப்பதாக இருந்த நண்பேன்டா, உத்தமவில்லன் படங்கள்கூட இந்த பிரச்னையினால் நழுவிப்போனது. இருப்பினும் இறங்கிவராத அவர் பின்னர் ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார்.
 
அங்குள்ள ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்ததால் இங்கு 3 கோடி என்ற கேட்டவருக்கு அங்கு 4 கோடி வரை சம்பளம் கொடுத்து விட்டனர். அதோடு சமந்தா தற்போது தமிழில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால், அவருக்காக காத்திருக்கும் சில தெலுங்குப்பட வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கும் திரைமறைவு வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் காஜல்.

அதனால் இப்போது யாராவது கோலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை தொடர்பு கொண்டு தமிழில் நடிக்கும் ஐடியா இருக்கிறதா? என்று காஜலிடம் கேட்டால், உங்களுக்கு 4 கோடி சம்பளம் தரும் ஐடியா இருக்கிறதா? என்று பதிலுக்கு கேட்கிறாராம. இதனால் இவர் நமக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய தயாரிப்பாளர்கள் காஜல்அகர்வாலை சுத்தமாக கைகழுவும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

Comments