ஐ’-ல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் அனிருத்!!!

2nd of July 2014
சென்னை:ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார் அனிருத்.வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளர்களில் முன்னனியில் இருப்பவர் அனிருத்.
 
இசை மட்டுமின்றி பாடல்களில் தோன்றி நடனமும் ஆடிவரும் அவருக்கு  எல்லோரும் நாயகனாக மாறிவரும் நிலையில் நாமும் மாறினால் என்ன என்ற என்னமும் அதே சமயம் ரசிகர்கள் தன்னை ஏற்பார்களா என்ற எண்ணமும் மாறி மாறி தோன்றி அவரை குழப்பவாதியாக்கிகொண்டிருக்கிறது.
 
சரி விசயத்துக்கு வருவோம். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்திற்உ ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் அனிருத் ஒரு பாடல் பாடியிருக்கிறார் என்பது தெரியாத விசயம்.

துவும் ஏ.ஆர்.ரகுமானே அனிருத்தை பாட அழைத்தாராம்.தனது அனைத்து குழப்பத்தையும் மூட்டைகட்டிவைத்துவிட்டு ஓடிவிட்டாராம் அனிருத்.பின்னே ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவது என்பது சாதாரண விசயமா என்ன? இதனை ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
அதுமட்டுமின்றி சமிபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஷங்கர், நான் அனிருத்தை கவனிச்சிட்டு வர்றேன். அவர்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு என்று கொழுத்திவிட்டு போனார். அனேகமா ஷ்ங்கரின் அடுத்த படத்தில் அனிருத் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போல.

Comments